ADDED : மார் 31, 2026 05:48 PM
செம்பட்டி:கன்னிவாடி, செம்பட்டி, ஆத்துார் சின்னாளபட்டி பகுதியில் அக்னி நட்சத்திரம் துவங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
மாவட்டத்தில் போதிய மழையின்றி பல கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இரு நாட்களுக்கு முன் சில இடங்களில் மட்டும் லேசான சாரல் இருந்தது. அக்னி நட்சத்திர காலம் துவங்கும் முன்பே பகல் நேரங்களில் வெயில் அதிகரித்து காணப்படுகிறது. காலை 8 :00 மணிக்கு துவங்கும் வெயில் மாலை பின்பும் நீடிக்கிறது. இதனால் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைய துவங்கி உள்ளது.
மாலை 6:30 மணிக்கு பின் மேகமூட்டம் சூழ்ந்து பலத்த காற்று வீசுகிறது. என்.பஞ்சம்பட்டி, வக்கம்பட்டி, வீரக்கல், கரிசல்பட்டி, குட்டத்துப்பட்டி, சித்தையன்கோட்டை பகுதிகளில் மாலையில் இதமான சூழல் நிலவுகிறது. ஆனாலும் இரவு நேர மின் தடை, வெப்ப சூழலால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
