ADDED : செப் 15, 2025 04:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : தென்மண்டல அளவில் காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி, மதுரை மாவட்டம் கடவூர் துப்பாக்கி சுடும் தளத்தில் நடந்தது. இதில் திண்டுக்கல் நகர் டி.எஸ்.பி., கார்த்திக், பிஸ்டல், இன்சாஸ் உள்ளிட்ட அனைத்து வகை துப்பாக்கி சுடுதல் பிரிவுகளிலும் முதல் பரிசு பெற்றார்.
இந்நிலையில் திண்டுக்கல் திரும்பிய அவரை, எஸ்.பி., பிரதீப் பாராட்டினார்.