UPDATED : நவ 28, 2026 09:00 PM
ADDED : நவ 28, 2026 08:58 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:
புனித பிரான்சிஸ் அசிசியார் 800வது ஆண்டு நினைவாக திண்டுக்கல் மறைமாவட்ட துறவியர் பேரவை சார்பில் உலக அமைதியை வலியுறுத்தி பேரணி நடந்தது.
எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார்.மணிக்கூண்டில் இருந்து துவங்கிய பேரணி முக்கிய ரோடு வழியே சென்று திருச்சி- பழநி ரோடு சந்திப்பில் உள்ள சவேரியப்பன் கல்லறை தோட்டம் அருகே முடிந்தது. தொடர்ந்து சமய நல்லிணக்க பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் மறைமாவட்ட பாதிரியார் தாமஸ் பால்சாமி, பாதிரியார்கள் மரிவளன், சாம்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
