/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தட்டி கேட்க இயலாத தலைவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்: மஹா., கவர்னர் ராதாகிருஷ்ணன்
/
தட்டி கேட்க இயலாத தலைவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்: மஹா., கவர்னர் ராதாகிருஷ்ணன்
தட்டி கேட்க இயலாத தலைவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்: மஹா., கவர்னர் ராதாகிருஷ்ணன்
தட்டி கேட்க இயலாத தலைவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்: மஹா., கவர்னர் ராதாகிருஷ்ணன்
ADDED : ஏப் 28, 2025 12:53 AM

திண்டுக்கல் : ''எங்கள் சகோதரர்களை அவர்களின் மனைவி கண்முன் சுட்டுக்கொன்றவர்களை தட்டிகேட்க கூட இயலாத தலைவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்,'' என, திண்டுக்கல்லில் மகாராஷ்டிரா கவர்னர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அபிராமி அம்மன் பக்தர்கள் குழு சார்பில் நடந்த ஆன்மிக கருத்தரங்கில் அவர் பேசியதாவது: திண்டுக்கல் மண்ணில் பலர் உயிர் தியாகங்கள் செய்தும் அன்னை அபிராமி இன்று வரை தன் இருப்பிடமான மலை மீது செல்லாமல் அடிவாரத்தில் இருக்கிறார்.
தமிழகத்தில் ஹிந்து மதம் மீண்டும் எழுச்சி பெறும் நாள் விரைவில் வரப்போகிறது. இறைவன் இருந்த இடத்தை போராடி பெற வேண்டிய நிலை நம் நாட்டில் மட்டுமே உள்ளது. வேலுார், செஞ்சியில் வெற்றி பெற்ற நாம் திண்டுக்கல் மலைக்கோட்டையிலும் வெற்றி பெறுவோம்.
இஸ்லாமியர்களுக்கு எதிராக ஹிந்துக்கள் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. ஆனால் முருக கடவுளை மறந்து விட வேண்டும் என சொல்லும் போது தான் அவர் இல்லாமல் வாழ முடியாது என கூறுகிறோம். மதுரையில் ஜூன் 22ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் 50 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும்.
பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தானின் திட்டமிட்ட சதி என கூறுவதற்கு கூட தமிழகத்தில் ஒரு சில யூடியூபர்களுக்கு மனம் இல்லை. எங்கள் சகோதரர்களை அவர்களின் மனைவி கண்முன் சுட்டுக்கொன்றவர்களை தட்டிகேட்க கூட இயலாத தலைவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்.
தேசிய கல்விக்கொள்கையில் 1 முதல் 5ம் வகுப்பு வரை எல்லா பாடங்களையும் தாய் மொழியான தமிழ் மொழியில் கற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
பின் அவர் கூறியதாவது: பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் மிகச்சரியான பாடத்தை விரைவில் கற்றுக்கொள்ளும். வி.சி.க., தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்டப்படும்.
துணை வேந்தர்களை நியமனம் செய்வதில் கவர்னர்களுக்கு முழு அதிகாரமும், கேரளா கவர்னருக்கு பரிபூரண அதிகாரம் உள்ளது என இரு தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இது போன்ற மோதல்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க சட்ட வல்லுனர்களை வைத்து செயல்படுவது நன்மையாக இருக்கும் என்றார்.

