/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேகம்: அரோகரா கோஷங்களுடன் கோலாகலம்
/
திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேகம்: அரோகரா கோஷங்களுடன் கோலாகலம்
திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேகம்: அரோகரா கோஷங்களுடன் கோலாகலம்
திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேகம்: அரோகரா கோஷங்களுடன் கோலாகலம்
ADDED : டிச 09, 2025 03:46 AM

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் பக்தர்களின் அரோகரா கோஷங்களுக்கு மத்தியில் கோலாகலமாக நடந்தது.
பழநி முருகன் கோயில் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக ஜூன் 16 ல் பாலாலயம் நடந்தது. நவ., 5 ல் கும்பாபிேஷக முகூர்த்தகால் நடப்பட்டது. டிச., 1 ல் 19 விமான கலசங்கள் பொருத்தப்பட்டன. டிச., 4 கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின.
டிச., 5 ல் அலங்கரிக்கப்பட்ட திருக்குடங்கள் யாக சாலையில் எழுந்தருள சூரிய பூஜை, சூரிய ஒளிக்கதிரில் இருந்து நெருப்பு எடுத்தல், திருமஞ்சனம் கொண்டு வருதல், நெல்லிமர வழிபாடுடன் முதற்கால வேள்வி நடந்தது. தொடர்ந்து தினமும் யாகசாலையில் கும்பாபிஷேக வேள்விகள் முடிந்து நேற்று (டிச., 8) அதிகாலை 4:00 மணிக்கு ஆறாம் கால வேள்வி நடந்தது. பின் காலை 6:26 மணிக்கு மூலவர் சன்னதி, திருச்சுற்றில் உள்ள சன்னதி, ராஜகோபுரம், மண்டப வாயில் கோபுரம் உள்ளிட்ட அனைத்து விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் அரோகரா கோஷங்களை எழுப்பினர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் நடந்தன.
அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி, எம்.எல். ஏ., செந்தில்குமார், ஹிந்து சமய அறநிலைத்துறை கமிஷனர் ஸ்ரீதர், கலெக்டர் சரவணன், எஸ்.பி., பிரதீப், அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், இணை கமிஷனர் மாரிமுத்து உட்பட பக்தர்கள் பங்கேற்றனர்.
துளிகள்
* பக்தர்கள் குளத்து ரோடு, சன்னதி வீதி பகுதிகளில் நின்று கும்பாபிஷேகம் காண அனுமதிக்கப்பட்டனர்.
* கும்பாபிஷேகம் நடந்து கொண்டிருந்த போது மூலவர் சன்னதி விமான கலசம், ராஜகோபர கலசம் ஆகியவற்றிற்கு ட்ரோன் மூலம் பூக்கள் துாவப்பட்டன.
* திருஆவினன்குடி கோயில் மூவாயிரம் கிலோ பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
* புதியதாக அமைக்கப்பட்ட பார்க்கிங் பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது.

