ADDED : அக் 13, 2025 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் திட்ட பயிலரங்கம் மாவட்ட மைய நுாலகத்தில் நடந்தது.
மெட்ரோ லயன் சங்க தலைவர் முருகன் தலைமை வகித்தார். செயலாளர் சவுந்தர்ராஜன், நூலகர் சுகுமார் முன்னிலை வகித்தனர்.
திருக்குறளும் வாழ்வும், என் வாழ்வில் திருக்குறள் உள்ளிட்ட தலைப்புகளில் திருக்குறள் திருப்பணிகள் திட்ட பயிற்றுனர்கள் லாசர் வேளாங்கண்ணி, மீராபாய் பேசினர்.
மாணவர்களுக்கு வினாடி, வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில், காந்தி மக்கள் இயக்க மாநிலத் தலைவர் ஜெயசீலன், கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் நரசிம்மன், கோவிந்தராசு கலந்துகொண்டனர்.