/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திருப்பரங்குன்றம் போராட்டம்; திண்டுக்கல்லில் ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் கைது
/
திருப்பரங்குன்றம் போராட்டம்; திண்டுக்கல்லில் ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் கைது
திருப்பரங்குன்றம் போராட்டம்; திண்டுக்கல்லில் ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் கைது
திருப்பரங்குன்றம் போராட்டம்; திண்டுக்கல்லில் ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் கைது
ADDED : பிப் 04, 2025 05:30 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லிலிருந்து திருப்பரங்குன்றத்தில் இன்று நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க முயற்சி செய்த ஹிந்து அமைப்பினர் 50க்கு மேலானவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றத்தில் இன்று (பிப்.4) மாலை ஹிந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்ட அறப்போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அங்கு செல்வோரை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் வாடகை வாகன டிரைவர்கள், உரிமையாளர் சங்கங்களையும் அழைத்து திருப்பரங்குன்றத்திற்கு வாடகைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.
பா.ஜ., ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி உள்ளிட்ட போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களை முன்னச்சரிக்கையாக கைது செய்து வருகின்றனர்.
இது தவிர ரயில்கள் மூலம் செல்வோரை கண்காணிக்க வடமதுரை, அய்யலுார் உள்ளிட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்படி செல்வோரை கண்காணித்து அடுத்தடுத்த நிலையங்களில் நடுவழியில் கைது செய்யும் திட்டம் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர் .
திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து பா.ஜ.,சிவசேனா, ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்பினர் இப்போராட்டத்தில் பங்கேற்கும் எண்ணத்தில் நிர்வாகிகள், தொண்டர்களை ஒருங்கிணைத்தனர்.
இதையறிந்த திண்டுக்கல் மாவட்ட போலீசார் மாவட்டம் முழுவதும் திண்டுக்கல் நகர், புறநகர், சின்னாளப்பட்டி, வத்தலக்குண்டு, பழநி, நத்தம், சாணார்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிளில் உள்ள போராட்டத்திற்கு ஆட்கள் சேர்க்கும் நிர்வாகிகள் 50க்கு மேலானவர்களை குறிவைத்து நேற்று காலை முதல் வீட்டுசிறை, மண்டபத்தில் அடைத்து வைப்பது, போலீஸ் ஸ்டேஷனில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அறிவுரை கூறுவது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
இதனால் நேற்று காலை முதல் பா.ஜ., உள்ளிட்ட ஹிந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் யாரும் வெளியில் வர முடியாமல் வீட்டிற்குள்ளே முடங்கினர். ஒவ்வொரு நிர்வாகிகள் வீடுகள் உள்ள பகுதிகளிலும் போலீசார் காலை முதலே ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
வீட்டு காவலில் பிராமண சமாஜம் தலைவர்
பழநி: போராட்டத்துக்க ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு பிராமண சமாஜம் அறிக்கை வெளியிட்டது.
இதை தொடர்ந்து நேற்று காலை தமிழ்நாடு பிராமண சமாஜ மாநில தலைவர் ஹரிஹர முத்துஅய்யரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து விசாரித்தனர்.
அதன்பின் அவருடன் ஒரு போலீசாருடன் வீட்டு காவலில் வைத்துள்ளனர்.
நத்தம்: பா.ஜ.க., மாவட்ட துணைத்தலைவர் லெட்சுமணன், மாவட்ட பொதுச்செயலாளர் சொக்கர், பா.ஜ., நிர்வாகி செல்வராஜ் உள்ளிட்டோரை நத்தம் போலீசார் கைது செய்தனர்.
சாணார்பட்டி: ஹிந்து முன்னணி நிர்வாகி கார்த்திகைசாமி, பா.ஜ.க., ஒன்றிய தலைவர் மணிகண்டன், முன்னாள் ஓ.பி.சி., அணி மாவட்ட செயலாளர் தனபால், முன்னாள் நிர்வாகி வேல்முருகன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

