/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இதிலுமா பித்தலாட்டம்: சோதனையின்றி இடைத்தரகர்களால் விதைகள் விற்பனை: அறுவடை பருவத்தில் ஏமாற்றத்தை சந்திக்கும் விவசாயிகள்

ADDED : ஜன 04, 2025 04:33 AM

மாவட்டத்தை பொறுத்தமட்டில் கொடைக்கானல், பழநி, ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, கன்னிவாடி, வடமதுரை, நிலக்கோட்டை விவசாயம் சார்ந்த பகுதிகளாக உள்ளன. இதில் மானாவாரி, பாசன வசதியுடன் ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்றாற்போல் சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் காய்கறி பயிர்களில் மரபு மாற்றம் செய்த வீரிய ரக விதைகள் உயர்த்தொழில் நுட்பத்துடன் சம்பந்தப்பட்ட உரக்கடைகளில் விற்பனைக்கு வருகின்றன. அதே நிலையில் பாரம்பரிய பயிர் வகைகள் ,அவரை, பீன்ஸ், சவ்சவ், முள்ளங்கி, கேரட், முட்டைக்கோஸ், உருளைகிழங்கு, பூண்டு, பட்டாணி உள்ளிட்ட பிற இதர வகை காய்கறிகளின் விதைகள் ஆங்காங்கே உள்ளூர் வியாபாரிகளிடம் வாங்கும் நிலை உள்ளது.
பெரும் பொருட்செலவில் விவசாயிகள் வியாபாரியிடம் இவ்வகையான விதைகளை வாங்கும் நிலையில் அவற்றின் உண்மை தன்மை, முளைப்பு திறன் உள்ளிட்ட விதை பரிசோதனை ஏதுமின்றி வெறுமனே இடைத்தரகர்கள் மூலம் பெறுவதால் விவசாயிகள் தாங்கள் பெரும் பொருட்செலவில் விவசாயம் செய்து அறுவடை பருவத்தில் ஏமாற்றத்தை சந்திக்கும் நிலை உள்ளது.
இத்தகைய சூழலால் ஏராளமான விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு கடனாளியாக உள்ளனர்.
இதை தவிர்க்க விதை விற்பனையாளர்களின் உண்மை தன்மையை அறிய தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் .
இதற்கு சம்பந்தப்பட்ட விதை விற்பனையாளர்கள் தங்களது விதையின் முளைப்புத் திறன் , தோட்டக்கலை துறையின் மூலம் விதை விற்பனை செய்யும் உரிமத்தை பெற்றிருக்க வேண்டும். இவ்வாறான நிலையில் விதைகளை பயன்படுத்தும் விவசாயிகள் பாதிக்கப்படாது விவசாயத்தில் நல்ல லாபம் ஈட்ட முடியும். இதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.