UPDATED : அக் 08, 2026 12:53 AM
ADDED : அக் 08, 2026 12:48 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா எஸ்.ஐ., சக்திவேல் தலைமையிலான போலீசார் ஏர்போர்ட் நகர் வன்னிபாறைப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது ரோட்டில் வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தி கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில் குழந்தைபட்டி விக்னேஸ்வரன் 23, என தெரிந்தது. வாலிபரை கைது செய்து கத்தியை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
