ADDED : மே 08, 2025 03:42 AM
அ நிறம் | அளவு
எரியோடு: வெல்லம்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் ஆனந்தன் 49.
இவர் சொட்டமாயனுாரை சேர்ந்த ராஜேந்திரனிடம் கடன் வாங்கி திரும்ப செலுத்திய நிலையில், கந்து வட்டி அடிப்படையில் அதிக பணம் பாக்கி உள்ளதாக கூறி அவரது ஊழியர்களான சொட்டமாயனுார் சரவணன், பி.கொசவபட்டி ஆறுமுகம் 47 ,ஆகியோருடன் சேர்ந்து ஆனந்தனை மிரட்டினர்.
ஆறுமுகத்தை கைது செய்த எரியோடு போலீசார் மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.
