தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வனத்தில் மரம் வெட்டிய மூவர் கைது

 வனத்தில் மரம் வெட்டிய மூவர் கைது

 வனத்தில் மரம் வெட்டிய மூவர் கைது


ADDED : பிப் 20, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 05:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: கன்னிவாடி வனப்பகுதியில் முறையான அனுமதி இன்றி சட்டத்துக்கு முரணாக தோதகத்தி மரங்களை வெட்டிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கன்னிவாடி அரசமரத்துப்பட்டி பீட் அருகில் உள்ள பண்ணைப்பட்டி கோம்பையில் கரூரை சேர்ந்த குணசீலன் சொந்தமான பட்டா நிலம் உள்ளது.

இதில் வளர்ந்துள்ள தோதகத்தி மரங்களை வெட்டுவதாக மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிடிஜாலாவுக்கு புகார் வந்தது. வனச்சரகர் குமரேசன் தலைமையிலான வனக்காவலர்கள் மரங்களை வெட்டிக்கொண்டிருந்த ராஜீவ்காந்தி, அன்வர், ராமர் 3 பேரை கைது செய்தனர். துாண்டுதலாக செயல்பட்ட குணசீலன், ரமேைஷ தேடி வருகின்றனர்.

வன அலுவலர்கள் கூறுகையில், ' பட்டா நிலமாகவே இருந்தாலும் வனப்பகுதிக்குள் பாதுகாக்கப்பட்ட மரங்கள் என பட்டியலிடப்பட்டுள்ள மரங்களை வெட்டுவது குற்றமாகும்.

ஜாமினில் வெளிவரமுடியாத குற்றத் திலும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தேவை ஏற்பட்டால் ரோஸ்வுட், தோதகத்தி மரங்களை வெட்டுவதற்கு வனத்துறையின் முன் அனுமதி வேண்டும்.

இதுவும் அதிகாரிகளின் கண்காணிப்பில் மரங்களை வெட்டவேண்டும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us