ADDED : ஆக 21, 2026 11:34 PM
அ நிறம் | அளவு
நிலக்கோட்டை, ஆக.22-
அம்மையநாயக்கனுார் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது தலைமையிலான போலீசார் நேற்று கொளிஞ்சிபட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது இருவர் ஆட்டோ ஒன்றில் பெரிய மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தனர்.
விசாரணையில் நிலக்கோட்டை கே.புதுாரை சேர்ந்த பயாஸ்அகமது 46, விக்னேஷ் 28, என்பது தெரிந்தது. மூட்டைகளை சோதனை செய்த போலீசார் 188 கிலோ குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
நிலக்கோட்டை கே.புதுாரை சேர்ந்த நிஜாம் 34, மளிகைக்கடைக்கு கொண்டு செல்ல முயன்றது தெரிந்தது. அவரையும் கைது செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ பறிமுதல் செய்தனர்.
