நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு : பழைய வத்தலக்குண்டு கலைஞர் காலனியை சேர்ந்தவர் அழகுராஜா 25, செல்லதுரை 39. இருவரும் டாஸ்மாக்கில் மது வாங்க நின்றனர். செண்டை மேள கலைஞர்கள் சின்னமனுார் முனீஸ்வரன் 24, உசிலம்பட்டி சரவணன் 24, கேரள மாநிலம் கோட்டயம் சங்கீத் 28 , ஆகிய மூவரும் தள்ளிவிட்டு மது வாங்க முயன்றனர்.
வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த மேளக் கலைஞர்கள் காலி மதுபாட்டில்களால் அழகுராஜா, செல்லத்துரையை தாக்கியதில் காயம் அடைந்தனர். வத்தலக்குண்டு போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

