ADDED : ஆக 19, 2026 04:21 AM
பழநி: பழநி மானுாரை சேர்ந்தவர் முனீஸ்வரன் மகன் விஷ்வா 16. இவர் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த விஷ்வா திடீரென சேலையில் துாக்குப் போட்டு தற்கொலை செய்தார். கீரனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
பழநி தாமரைகுளத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கண்ணப்பன் 68. நேற்று முன்தினம் இவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பழநி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
பழநி குபேரபட்டினத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஐயப்பன் 45. மது போதைக்கு அடிமையான இவர் நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்தார். பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
