sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

புதுமாப்பிள்ளை கொலை போதை சிறார்கள் மூவர் கைது

/

புதுமாப்பிள்ளை கொலை போதை சிறார்கள் மூவர் கைது

புதுமாப்பிள்ளை கொலை போதை சிறார்கள் மூவர் கைது

புதுமாப்பிள்ளை கொலை போதை சிறார்கள் மூவர் கைது


ADDED : ஜன 02, 2025 05:37 AM

Google News

ADDED : ஜன 02, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு காப்பிளியப்பட்டியில் வீட்டில் துாங்கி கொண்டிருந்த புதுமாப்பிள்ளையை முன்விரோதம் காரணமாக மதுபோதையிலிருந்த 3 சிறுவர்கள் கொலை செய்த நிலையில் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

தாடிக்கொம்பு காப்பிளியப்பட்டி ஏ.டி.காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி காளீஸ்வரன் 25. திருமணம் ஆகி 6 மாதமாகிறது. இவர் நேற்று முன்தினம் மது அருந்திய நிலையில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டனர். இதை காளீஸ்வரன் கண்டிக்க தகராறு ஏற்பட்டது.

இதன் ஆத்திரத்தில் மூவரும் அன்று இரவு 11:00 மணிக்கு வீட்டில் துாங்கி கொண்டிருந்த காளீஸ்வரனை இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்தனர். இதிலும் ஆத்திரம் தீராமல் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து தப்பினர். தாடிக்கொம்பு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து 3 சிறுவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.






      Dinamalar
      Follow us