தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 3 பவுன் செயின் பறித்த இருவர் கைது

3 பவுன் செயின் பறித்த இருவர் கைது

3 பவுன் செயின் பறித்த இருவர் கைது


UPDATED : செப் 23, 2026 05:31 PM

ADDED : செப் 23, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2026 05:31 PM ADDED : செப் 23, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குஜிலியம்பாறை:குஜிலியம்பாறை அருகே மளிகைக்கடையில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

குஜிலியம்பாறை மல்லப்புரம் ரோட்டில் நல்லாக்கவுண்டன்பட்டி பிரிவு அருகே ராஜலட்சுமி 54, மளிகைக்கடை நடத்தி வருகிறார். செப்.,9ல் இவரது கடைக்கு 2 வாலிபர்கள் முகத்தை துணியால் மூடியபடி டூவீலரில் வந்தனர். தண்ணீர் பாட்டில் கேட்பது போல் நடித்து ராஜலட்சுமி கழுத்தில் இருந்த ஐந்தரை பவுன் தங்கச்செயினை பிடித்து இழுத்தனர். செயின் அறுந்த நிலையில் கையில் சிக்கிய 3 பவுன் நகையுடன் இருவரும் டூவீலரில் தப்பிச்சென்றனர். புகாரின் பேரில் குஜிலியம்பாறை போலீசார் அப்பகுதி சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர்.

நேற்று பாளையம் செக்போஸ்டில் டூவீலரில் வந்த இரு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அதில் கரூர் கிருஷ்ணராயபுரம் மாணிக்கவாசகம் 28, குளித்தலை கருங்காலப்பள்ளி பாரதிதாசன் 23, என்பதும் ராஜலட்சுமியிடம் செயின் பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து உருக்கிய நிலையில் மூன்று பவுன் நகையை போலீசார் மீட்டனர். இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us