ADDED : மார் 01, 2024 06:32 AM
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் பகுதியில் பல்வேறு இடங்களில் மூதாட்டிகளிடம் நகையைப் பறித்து சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம் ஏ.பி. பி. நகர் உட்பட பல இடங்களில் நகைப் பறிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்தது.
கொள்ளையர்களை ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், எஸ்.ஜ., இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர்.
சி.சி. டி.வி ., பதிவு உதவியுடன் தேடிவந்த நிலையில் கொள்ளையர்கள் தஞ்சாவூரில் பதுங்கி இருப்பது தெரிந்தது.
அங்கு சென்று போலீசார் திருச்சி மாவட்டம் தொட்டியம் முல்லை நகரை சேர்ந்த பிரசாத் மாதவன் 20, ரங்கராஜ் 20, சொக்கத்தங்கம் 20 , ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில் பல மாவட்டங்களில் கொள்ளை அடித்து அதன் மூலம் கிடைத்த பணத்தில் சொகுசாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. இவர்களிடமிருந்து 21 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

