ADDED : ஆக 21, 2026 09:54 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், ஆக.22
திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், எஸ்.ஐ., சக்திவேல் கண்காணிப்பில் போலீசார் ரோந்து சென்றனர். முத்தழகுபட்டி பிரிவில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபர்களிடம் விசாரித்தனர். சாணார்பட்டி எமக்கலாபுரம் அஜித்குமார் 27, செட்டிநாயகன்பட்டி பாலமுருகன் 32, வெள்ளோடு கரட்டழகன்பட்டி விஜயன் 30, என தெரிந்தது. சட்டவிரோத விற்பனைக்காக உலர் கஞ்சா வைத்திருந்தது சோதனையில் தெரிந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா, 2 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.
