/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இலை சுருட்டலால் பாதிக்கும் தக்காளி
/
இலை சுருட்டலால் பாதிக்கும் தக்காளி
ADDED : நவ 08, 2025 01:47 AM
ஒட்டன்சத்திரம்: இலைச்சுருட்டல் நோயால் ஒட்டன்சத்திரம் பகுதியில் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கை தங்கச்சி அம்மாபட்டி காவேரி அம்மாபட்டி சாலைப்புதுார் கள்ளிமந்தயம் பாலப்பம்பட்டி சுற்றியபகுதிகளில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் தக்காளி விளைவிக்கப்படுகிறது.
போதிய மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் அவ்வப்போது பனிப்பொழிவு இருந்ததால் தக்காளி செடிகள் பாதிக்கப்பட்டது.
செடிகளில் இருந்த இலைகள் இலை சுருட்டல் நோயால் பாதிக்கப்பட்டு சுருங்கி விட்டது. இதன் காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தக்காளி குறிப்பிட்ட அளவைவிட சிறியதாக உள்ளது.
தக்காளி செடிகளை தாக்கும் நோய்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கையாக உரிய பூச்சிக்கொல்லி மருந்துகளை பரிந்துரை செய்ய வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

