தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு

 வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு

 வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு


ADDED : பிப் 12, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 06:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடமதுரை: அய்யலுாரில் வரத்து அதிகரிப்பால் தக்காளி கொள்முதல் விலை வெகுவாக குறைந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை, அய்யலுார், கோபால்பட்டி, ஒட்டன்சத்திரம் உள்பட அனைத்து பகுதியிலும் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. முதலீடு, பராமரிப்புச் செலவு குறைவு, நல்ல லாபம் தரக்கூடிய பயிர் என்பதால் ஏராளமான விவசாயிகள் ஆர்வத்துடன் தக்காளி பயிரிடுகின்றனர். சில நேரங்களில் கடும் விலை வீழ்ச்சி அடைந்தாலும், ஏதாவது ஒரு கட்டத்தில் விலை உச்சத்திற்கு சென்று லாபம் பார்க்க முடிவதால், மனம் தளராமல் தொடர்ந்து தக்காளி பயிரிடும் விவசாயிகள் அதிகம் உள்ளனர். கடந்த சில நாட்களாக மாநில அளவில் தக்காளி வரத்து அதிகமாக இருப்பதால் அய்யலுார் மார்க்கெட்டில் கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து, 17 கிலோ எடை கொண்ட வீரிய ரக தக்காளி பெட்டிக்கு நேற்று ரூ.150 வரையே விலை கிடைத்தது. கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் இது 50 சதவீதம் குறைவாகும். கடைகளில் சில்லரை விற்பனையில் கிலோ ரூ.10 என விற்பனை ஆனது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us