/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விலையின்றி ரோட்டில் கொட்டப்படும் தக்காளி
/
விலையின்றி ரோட்டில் கொட்டப்படும் தக்காளி
ADDED : நவ 07, 2025 04:39 AM

பழநி: பழநி பகுதியில் தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் சாலையில் கொட்டுகின்றனர்.
பழநி பகுதியில் விவசாயிகள் தக்காளி, காலிபிளவர். வெண்டைக்காய். கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளை விளைவித்து கமிஷன் மண்டி , சந்தைகளில் விற்று வருகின்றனர். சில நாட்களாக தக்காளியின் விலை குறைந்து வருகிறது.
நேற்று உழவர் சந்தையில் ரூ.15 முதல் ரூ.25 வரை ஒரு கிலோ தக்காளி விற்கப்பட்டது. இந்நிலையில் போதுமான அளவு விலை கிடைக்காததால் விவசாயிகள் சாலையில் தக்காளிகளை கொட்டி சென்றனர். சாலையில் திரியும் கால்நடைகள் அவற்றை உண்டு செல்கின்றன. இதோடு தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

