/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
/
'கொடை'யில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
ADDED : ஜன 26, 2026 04:36 AM

கொடைக்கானல்: தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வார விடுமுறை, குடியரசு தினம் என தொடர் விடுமுறையால் குளு, குளு நகரான கொடைக்கானலுக்கு நேற்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். அங்குள்ள பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வன சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்தனர். ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி, ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் அப்சர்வேட்டரி இடையே வாகனங்கள் அணிவகுத்து நின்றததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போது சாரல் மழை பெய்தது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.

