/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' யில் குவிந்த சுற்றுலா பயணிகள்; நெரிசலால் பயணிகள் அவதி
/
'கொடை' யில் குவிந்த சுற்றுலா பயணிகள்; நெரிசலால் பயணிகள் அவதி
'கொடை' யில் குவிந்த சுற்றுலா பயணிகள்; நெரிசலால் பயணிகள் அவதி
'கொடை' யில் குவிந்த சுற்றுலா பயணிகள்; நெரிசலால் பயணிகள் அவதி
ADDED : டிச 27, 2025 06:44 AM

கொடைக்கானல்: கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் மற்றும் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை அடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை நகரில் குவிந்தனர்.
தொடர் விடுமுறையால் குளு, குளு நகரான கொடைக்கானலுக்கு ஏராளமான பயணிகள் வாகனங்களில் முகாமிட்டனர். இதையடுத்து நகரில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இங்குள்ள ரோஜா, பிரையன்ட் பூங்காக்கள், கோக்கஸ்ர் வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனூர் சுழல் சுற்றுலா மையம், பேரிஜம், உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். ஏரி சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்தனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆங்காங்கே போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.