ADDED : ஆக 30, 2026 01:12 AM

அ நிறம் | அளவு
கொடைக்கானல்: வார விடுமுறை நாளான நேற்று குளு, குளு நகரான கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
அங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, செட்டியார் பூங்கா, வனச்சுற்றுலா தலங்களை பார்வையிட்டு ரசித்தனர். மேலும் ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர். நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் ரம்யமான சீதோஷ்ண நிலையை அனுபவித்தனர்.
