ADDED : செப் 28, 2026 12:40 AM

அ நிறம் | அளவு
கொடைக்கானல்: கொடைக் கானலில் வார விடுமுறை, காலாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பயணிகள் வருகை தந்தனர்.
தரைப்பகுதியில் அதிகரித்த வெப்பத்தால், கோடை வெயிலை சமாளிக்க குளு, குளு நகரான கொடைக்கானலுக்கு வருகை தந்தனர். பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, செட்டியார் பூங்கா, வனச் சுற்றுலா தலங்களை ரசித்தனர். தொடர்ந்து ஏரிச்சாலையில், குதிரை, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர். வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு ரம்யமான சூழல் நிலவியது.
