/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மலை ரோட்டில் குவிக்கப்படும் மரங்களால் போக்குவரத்து இடையூறு
/
மலை ரோட்டில் குவிக்கப்படும் மரங்களால் போக்குவரத்து இடையூறு
மலை ரோட்டில் குவிக்கப்படும் மரங்களால் போக்குவரத்து இடையூறு
மலை ரோட்டில் குவிக்கப்படும் மரங்களால் போக்குவரத்து இடையூறு
ADDED : நவ 02, 2025 04:25 AM

கண்டுகொள்ளாத வனத்துறை
தாண்டிக்குடி: தாண்டிக்குடி வத்தலக்குண்டு ரோட்டில் குவிக்கப்படும் மரங்களால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
இம்மலைப் பகுதியில் விவசாய தோட்டங்களில் வனத்துறை அனுமதியுடன் மரங்கள் வெட்டப்படுகின்றன. இவை மலைத்தள பாதுகாப்பு விதிகளின்படி அகற்றப்படாமல் குறைந்த அளவு மரங்களுக்கு அனுமதி பெற்று கூடுதல் மரங்கள் வெட்டப்படுவது அதிகரிக்கின்றன.
அனுமதி பெற்ற விவசாயத் தோட்டங்களில் இருந்து லாரிகள் மூலம் மரங்கள் தரை பகுதிக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்ல வனத்துறை அனுமதி சீட்டு வழங்குகிறது. இருந்த போதும் விதி முறைகளை வியாபாரிகள் கடைபிடிக்காது போக்குவரத்துள்ள மெயின் ரோட்டோரங்களில் மரங்களை குவிக்கும் செயல்களை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதை கண்காணிக்க வேண்டிய நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை அதிகாரிகள கண்டு கொள்வதில்லை.
மரங்கள் லாரிகளில் குறிப்பிட்ட இடத்தில் ஏற்றி செல்வதை வனத்துறையினரும் கண்டுகொள்வதில்லை.
இவ்வாறான செயல்களால் மெயின் ரோட்டில் மரங்கள் குவிக்கப்பட்டு அவை போக்குவரத்திற்கு இடையூறாக மங்களம்கொம்பு, கானல்காடு, தடியன்குடிசை இடையே பரவலாக உள்ளது.
மாதக்கணக்கில் இதுபோன்று மரங்கள் குவிப்பதால் ரோடு பக்கவாட்டு பகுதி சேதமடைகிறது.
மேலும் ராட்சத கிரேன் மூலம் மரங்களை ஏற்றுவதால் போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது.
பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்து இவர்களின் செயல்களால் தாமதமாக செல்லும் நிலை உள்ளது.
லாரிகளை உடனடியாக எடுக்க வலியுறுத்தும் வாகன ஓட்டிகளிடம் வாக்குவாதத்தை மர வியாபாரிகள் கடைபிடிக்கின்றனர். இதனால் ரோடு சேதம் அடைவதும், வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.
மாவட்ட நிர்வாகம்தான் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

