தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 'கொடை'யில் போக்குவரத்து நெரிசல்

 'கொடை'யில் போக்குவரத்து நெரிசல்

 'கொடை'யில் போக்குவரத்து நெரிசல்


ADDED : மே 14, 2026 05:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2026 05:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொடைக்கானல்: கொடைக்கானல் அண்ணா சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சுற்றுலா தலமான கொடைக்கானலில் வணிக நிறுவனங்கள், பாங்க், போலீஸ் ஸ்டேஷன், பத்திரவுப்பதிவு, தாலுகா அலுவலகம், தபால் நிலையம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன. ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.

இங்கு வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதியின்றி ரோட்டின் இருபுறம் நிறுத்தும் போக்குள்ளது.

ஒரு வழிப்பாதையான இந்த ரோட்டில் நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் முன்வராத நிலையில் சுற்றுலா பயணிகள், உள்ளூர்வாசிகள் அவதிப்படுகின்றனர்.

டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்களின் போக்கால் அண்ணா சாலை நாள்தோறும் நெரிசலால் அல்லல்படுகிறது. இதனை தவிர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us