/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்
/
கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்
ADDED : மார் 22, 2026 06:16 AM

கொடைக்கானல்: தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ரம்ஜான், வார விடுமுறையால் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இதனால் நேற்று டைகர் சோலை முதல் வெள்ளி நீர்வீழ்ச்சி வரை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நகராட்சி சோதனைச்சாவடியில் தானியங்கி 'பாஸ்டேக்' சரிவர செயல்படாததாலும், தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனை காரணமாகவும் மதியம் வரை நெரிசல் நீடித்தது.
மாலையில் ஏரிச்சாலை சந்திப்பு, மூஞ்சிக்கல், அப்சர்வேட்டரி, பஸ் ஸ்டாண்ட், பூம்பாறை, மன்னவனுார் ரோடு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருந்தது. போலீசார் நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

