ADDED : ஏப் 21, 2026 07:56 PM
அ நிறம் | அளவு
வடமதுரை:சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவை யொட்டி செங்கோட்டை மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் நாளை (ஏப்.23) வழக்கமான நேர் வழியில் செல்கிறது.
மதுரை திண்டுக்கல் ரயில் பாதையில் 6 மாதங்களுக்கு மேலாக பகல் நேரத்தில் நடக்கும் பராமரிப்பு பணியால் புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் மானாமதுரை, காரைக்குடி வழியே சுற்றுப்பாதையில் செங்கோட்டை மயிலாடுதுறை ரயில் செல்கிறது. நாளை ஓட்டுப்பதிவு நடப்பதால் பணியில் சிறிது மாறுதல் செய்து வழக்கமான நேர் பாதையில் திண்டுக்கல், வடமதுரை, மணப்பாறை வழியே இந்த ரயில் செல்ல ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இன்றும் நாளையும் இவ்வழியே செல்கிறது.
