தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்


UPDATED : அக் 07, 2026 01:58 PM

ADDED : அக் 07, 2026 12:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 01:58 PM ADDED : அக் 07, 2026 12:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேடசந்துார்: தமிழக அரசு புதிதாக கொண்டு வந்துள்ள வெற்றித் திட்டத்தின் கீழ் அலுவலர்கள் குக்கிராமங்கள் வாரியாக சென்று மக்களுக்கு தேவையான குடிநீர், ரோடு, கழிவுநீர் வாய்க்கால், பொதுக்கழிப்பறை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து கணக்கெடுப்பில் ஈடுபட உள்ளனர்.

அதன் அடிப்படையில் வரும் காலங்களில் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையொட்டி வேடசந்துார் வட்டார அளவில் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சாந்தி தலைமை வகித்தார். பி.டி.ஓ., கற்பகம் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொறியாளர்கள் பாலன், வேலுமணி, ஊராட்சி செயலர்கள், பல்வேறு துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us