UPDATED : மே 20, 2026 05:21 PM
ADDED : மே 20, 2026 05:12 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார்:அமைதி அறக்கட்டளை சார்பில் சமூக நீதிக்கான பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் குடும்பத்தில் உள்ள கணவன் மனைவிக்கு இடையேயான பாலின பாகுபாட்டை தவிர்த்தல், குடும்ப வன்முறை ஏற்படாத வகையில் தடுத்தல் ,கண்காணித்தல், குழு உறுப்பினர் களுக்கு சட்டம் சார்ந்த கருத்துக்களை தெரிவித்தல் உள்ளிட்ட பயிற்சி முகாம் நடந்தது. திட்ட மேலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
சமூக நலன் , பயிற்சியாளர் பவித்ரா கருத்துரை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் நதியா, சசிகலா, புவனேஸ்வரி பங்கேற்றனர்.
