ADDED : ஏப் 05, 2026 06:51 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் அனுமதியுடன் கால்பந்து பயிற்சியாளர்களுக்கு 'சி சர்பிகேட்' பயிற்சி திண்டுக்கல்லில் தனியார் பள்ளியில் நடந்தது. மாவட்டத்தை சேர்ந்த 23 பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதன் நிறைவு விழாவிற்கு தமிழக கால்பந்து கழக ஒருங்கிணைப்பாளர் பஷீர் அகமது தலைமை வகித்தார். தனியார் பள்ளி தாளாளர் ஜஸ்வந்த், மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தனர். பயிற்றுனர் பார்த்தசாரதி துளசி, ஒருங்கிணைப்பாளர் தங்கதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
