ADDED : மார் 28, 2026 06:06 PM
அ நிறம் | அளவு
பழநி;பழநி தொகுதி ஓட்டு சாவடி தலைமை அலுவலர்கள் ஓட்டு சாவடி அலுவலர்கள் முதல் கட்ட பயிற்சி பழநியாண்டவர் கலை பண்பாட்டு கல்லுாரியில் நடந்தது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை செயல்படுத்தும் முறை, ஓட்டு பதிவு மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கலெக்டர் சரவணன், ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் சக்திவேலன் பங்கேற்றனர்.
ஒட்டன்சத்திரம்: கிறிஸ்டியன் பொறியியல் கல்லுாரியில் நடந்த பயிற்சியில் கலெக்டர் சரவணன் பங்கேற்று ஆய்வு செய்தார். தேர்தல் அலுவலர் பிரபு, உதவி அலுவலர் சஞ்சய் காந்தி, நகராட்சி கமிஷனர் ஸ்வேதா கலந்து கொண்டனர்.
