தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சிக்னலை துண்டித்ததால் ரயில்கள் தாமதம்

 சிக்னலை துண்டித்ததால் ரயில்கள் தாமதம்

 சிக்னலை துண்டித்ததால் ரயில்கள் தாமதம்


ADDED : பிப் 20, 2026 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 05:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: வடமதுரையில் மின்கம்பத்தை மாற்று இடத்தில் நடுவதற்கு தோண்டிய குழியால் ரயில்வே சிக்னல் ஒயர் சேதமடைந்ததால் ரயில்கள் தாமதமாக சென்றன.

வடமதுரை - செங்குறிச்சி ரோட்டில் இருக்கும் ரயில்வே கேட் பகுதியில் தனியார் நிலத்தில் இருக்கும் மின் கம்பத்தை நெடுஞ்சாலையோரம் மாற்றியமைக்கும் நோக்கில் நேற்று மின்வாரிய ஊழியர்கள் மண் அள்ளும் இயந்திரம் கொண்டு குழி தோண்டினர்.

அப்போது அப்பகுதி பூமிக்கடியில் இருந்த ரயில்வே சிக்னல் ஒயர்கள் சேதமடைந்தன. இதையறிந்த மின்வாரிய குழுவினர் குழியை மூடிவிட்டு சென்றுவிட்டனர். சிக்னல் முறையாக செயல்படாததால் வடமதுரையில் நின்று புறப்பட வேண்டிய மயிலாடுதுறை - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சிக்னல் தர முடியாத நிலை ஏற்பட்டது.

சிறிது நேரம் நிறுத்தப்பட்டு காசன் ஆர்டர் கையெழுத்து உத்தரவு முறையில் ரயிலை அப்பகுதியில் கடந்து செல்ல ஸ்டேஷன் மாஸ்டர் அனுமதித்தார்.

இதே முறையில் சென்னை -குருவாயூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் -தாம்பரம் அம்ரிட் பார்த் ரயில்கள் இப்பகுதியை கடக்க அனுமதிக்கப்பட்டது. இப்பிரச்னையால் ரயில்வே கேட் நீண்டநேரம் மூடியே இருந்ததால் ரோடு போக்குவரத்தும் பாதித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us