ADDED : ஜூன் 13, 2026 02:14 AM
அ நிறம் | அளவு
பாலசமுத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் பழநி பாலசமுத்திரம் தேக்கம்தோட்டம் பகுதியில் கொடைக்கானல் சாலையில் போலீஸ் சோதனைச்சாவடி உள்ளது. கேரளாவை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மதுபாட்டிலுடன் சோதனைச்சாவடி வழியாக கொடைக்கானலுக்கு சென்றனர்.
பணியில் இருந்த ஏட்டு அழகர் 33, இளைஞர்களை சோதனை செய்து மதுபாட்டிலை பறிமுதல் செய்தார். மதுபாட்டிலை திருப்பி தருவதற்கு ஏட்டு லஞ்சம் பெற்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து ஏட்டு அழகரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் உத்தரவிட்டார்.
