ADDED : ஆக 20, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரியோடு; குதுப்பனம்பட்டியில் மாவட்ட நட்பு சங்கங்களின் நண்பர்கள், ஸ்டார் புரமோட்டர்ஸ் இணைந்து ஸ்டார் கிரீன் அவென்யூ வளாகம், ரோட்டோர பகுதிகளில் 800 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. லயன்ஸ் சங்க முன்னாள் கவர்னர்கள் ஆர்.கே.தங்கராஜ், டி.பி.ரவீந்திரன், சுற்றுச்சூழல் மாவட்ட தலைவர் ஆஷாரவீந்திரன் துவக்கி வைத்தனர்.
நிர்வாக இயக்குனர் நல் நாகராஜன் வரவேற்றார். உதயம் லயன்ஸ் சங்க தலைவர் வர்க்கீஸ், செயலாளர் கற்பக கணேஷ் பங்கேற்றனர்.