ADDED : மே 08, 2026 04:38 AM
அ நிறம் | அளவு
கொடைக்கானல்: - கொடைக்கானல் பாம்பார்புரம் புனித தெரசாள் உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது. சன் லயன்ஸ் சங்கம், கோவை விவசாய சங்கம் இணைந்து சோலை மரக்கன்றுகளை நடவு செய்தது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தும் நோக்கில் நடந்த இதற்கு சங்க முன்னாள் ஆளுநர் டி. பி. ரவீந்திரன் தலைமை வகித்தார். சன் லயன்ஸ் சங்கத் தலைவர் செந்தில்குமார், செயலாளர் சுரேஷ் பால்ராஜ் முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர்கள் ஆஷா, கிரண், ஜெரால்டு ராஜா கலந்து கொண்டனர்.
