ADDED : மார் 18, 2026 06:04 AM

தொப்பம்பட்டி: தொப்பம்பட்டி சுற்று பகுதிகளில் வீசிய சூறைக்காற்றால் தென்னை ,முருங்கை மரங்கள் வேரோடு சாய்ந்தன.
தொப்பம்பட்டி பகுதியில் உள்ள புளியம்பட்டி, வில்வாதம்பட்டி, ரூக்குவார்பட்டி, அமரப்பூண்டி பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்று வீசியது. நுாற்றுக்கணக்கான தென்னை முருங்கை மரங்கள் வேரோடு சாய்ந்ததால் லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பினார். புளியம்பட்டி விவசாயி சேது, பழநி புளியம்பட்டி பகுதியில் 2.5 ஏக்கரில் முருங்கை விவசாயம் செய்து வருகிறேன்.
ஆறு மாதம் வளர்ந்த கரும்பு முருங்கை, சில மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது. இதுவரை ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரம் செலவு செய்துள்ளேன். இந்த செடிகள் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை கவாத்து பணிகள் மட்டும் செய்திருந்தால் தொடர்ந்து அறுவடை பலன்கள் கிடைக்கும். நேற்று முன்தினம் இரவு வீசிய சூறைக்காற்றால் ஒரு ஏக்கர் நிலத்தில் வைக்கப்பட்ட முருங்கை மரங்கள் வேரோடு சாய்ந்தன என்றார்.
