ADDED : மார் 03, 2026 04:50 AM
எரியோடு: வேடசந்துார் சட்டசபை தொகுதி த.வெ.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எரியோட்டில் நடந்தது. மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். வடமதுரை ஒன்றிய செயலாளர் சந்தோஷ் முன்னிலை வகித்தார். எரியோடு நகர செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
ஒன்றிய செயலாளர்கள் ஐயப்பன், பவுன்ராஜ், பாண்டியன், நகர செயலாளர்கள் வெங்கடேஷன், சிவபிரகாஷ், ஆண்டி, வீரமலை, வடமதுரை ஒன்றிய அமைப்பாளர் சுரேஷ் பங்கேற்றனர். தேர்தலுக்காக செய்ய வேண்டிய முன் தயாரிப்பு பணிகள் விவாதித்தனர்.
பழநி: பழநியில் த.வெ.க., சார்பில் மாவட்டச் செயலாளர் கார்த்திக்ராஜன் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. தேர்தலில் தலைவர் விஜய் வெற்றி பெற இணைந்து செயல்பட வேண்டும். கொடைக்கானல், சுற்றியுள்ள மலைவாழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். பழநி தொகுதி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
