ADDED : நவ 17, 2025 02:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: எஸ்.ஐ.ஆர்., க்கு எதிராக த.வெ.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் (எஸ்.ஐ.ஆர்.,) திருத்தப்பணி நடக்கிறது. எஸ்.ஐ.ஆர்.,க்கு ஆளும் தி.மு.க., கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், த.வெ.க., சார்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன்தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களிலும், த.வெ.க.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சித்தலைவர் விஜய் அறிவித்தார். அதன்படி, திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே மாவட்ட செயலாளர்கள் தர்மராஜ், தேவா, நிர்மல்குமார், தேவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளிலிருந்தும் இளம்பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

