ADDED : மார் 13, 2026 06:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தமிழக வெற்றி கழகத்தின் திண்டுக்கல் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்கள் தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நாகல் நகரில் நடந்தது.
கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மராஜ் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல்குமார், மத்திய மாவட்ட செயலாளர் வாசுதேவன், மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக்ராஜன் முன்னிலை வகித்தனர்.

