/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
செயல்படாத கழிப்பறையால் தொல்லை; அவதியில் பழநி 31 வது வார்டு மக்கள்
/
செயல்படாத கழிப்பறையால் தொல்லை; அவதியில் பழநி 31 வது வார்டு மக்கள்
செயல்படாத கழிப்பறையால் தொல்லை; அவதியில் பழநி 31 வது வார்டு மக்கள்
செயல்படாத கழிப்பறையால் தொல்லை; அவதியில் பழநி 31 வது வார்டு மக்கள்
ADDED : ஜன 02, 2025 05:37 AM

பழநி: செயல்படாத கழிப்பறையால் தொல்லை, குப்பை குவியலால் நோய் தொற்று என பழநி நகராட்சி 31 வது வார்டு மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
அடிவாரம், கிரிவீதி, சன்னதி ரோடு, அய்யம்புள்ளி ரோடு, பள்ளி அறை தோட்டம், இட்டேரி வீதியை உள்ளடக்கிய இந்த வார்டில் பக்தர்களின் வருகை அதிகரிப்பால் குப்பை அதிகரித்துள்ளன.
வெளி மாநில நபர்கள் நடமாட்டம் உள்ளதால் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு வருகிறது.நாய்கள் தொல்லையால் வார்டு மக்கள் தினமும் அவதிக்குள்ளாகின்றனர்.செயல்படாத கழிப்பறையால் திறந்த வெளிபயன்பாடு அதிகம் உள்ளது.
தேவை சமுதாயக்கூடம்
நாகவேணி, குடும்பத் தலைவி, பள்ளி அறை தோட்டம்: நரிக்குறவர்கள் அதிகளவில் தங்கி உள்ளனர். இவர்களால் முகம் சுளிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகிறது. இவர்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். சமுதாயக்கூடம் அமைத்தால் இப்பகுதி மக்கள் சிறு விழாக்கள் நடத்த ஏதுவாக இருக்கும்.
வணிக வளாகம் அமைக்கலாம்
தங்கராஜ், பேன்சி கடை உரிமையாளர், இட்டேரி ரோடு: பல நாட்களாக கழிப்பறை செயல்படாமல் உள்ளது. இக் கழிப்பறையை இடித்து விட்டு வணிக வளாகம் கட்டினால் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். இளைஞர்களுக்கான பூங்கா அமைத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தினால் அவர்கள் மாற்று வழியில் செல்வதை தவிர்க்கலாம்.
இடம் மாற்றுங்க
பாலகிருஷ்ணன்,டீகடை உரிமையாளர், இட்டேரி ரோடு: நாய்த் தொல்லை அதிகம் உள்ளது .பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளதால் குப்பை அதிக அளவில் சேர்ந்துள்ளது. போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும். செயல்படாமல் உள்ள கழிப்பறையை இடமாற்ற வேண்டும்.
நடவடிக்கை எடுக்கப்படுகிறது
தீனதயாளன், கவுன்சிலர் (தி.மு.க.,): ரேஷன் கடை கட்டப்பட்டு வருகிறது. சமுதாய கூடமும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையம் அமைக்கப்படுகிறது. கழிப்பறையை அகற்றி வணிக வளாகம் கட்ட எம்.எல்.ஏ., மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குப்பை அகற்ற போதுமான பணியாளர்கள். வாகனங்கள் இல்லை. அதனை வாங்க நகராட்சியில் வலியுறுத்தி வருகிறேன். கார்த்திகை ஒன்று முதல் பங்குனி வரை பக்தர்கள் வருகை உள்ளதால் கோயில் நிர்வாகம் விழா காலங்களில் மட்டும் குப்பை அகற்ற பங்களிப்பு அளித்து வருகிறது என்றார்.

