தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ முயற்சிக்கலாமே: கழிப்பறை கழிவுகளை உரமாக மாற்றலாமே

முயற்சிக்கலாமே: கழிப்பறை கழிவுகளை உரமாக மாற்றலாமே

முயற்சிக்கலாமே: கழிப்பறை கழிவுகளை உரமாக மாற்றலாமே


ADDED : நவ 08, 2024 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2024 04:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனித நாகரிக வளர்ச்சியில் தற்போது மக்காத குப்பைகளின் ஆதிக்கம் அதிகரித்து பூமியை பாழ்படுத்தும் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு மனித குலத்தால் தெருவிலும், குப்பை தொட்டிகளிலும் வீசப்படும் பொருட்களை முறைப்படி மறுசுழற்சிக்கும், மக்க வைக்க நடவடிக்கை எடுக்காமல் பல இடங்களில் தீயிட்டு கொளுத்தப்படும் அவலமும் நடக்கிறது.

இதனால் பல்வேறு நோய்கள் மனிதருக்கும், உயிரினங்களுக்கும் ஏற்படுகிறது. சில பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் பணியாளர்களை அமர்த்தி மக்கும் பொருட்களை துண்டு, துண்டாக வெட்டி அதற்குரிய தொட்டியில் சானம், நுண்ணுயிர் கரைசல் கலந்து பல நாட்கள் வைத்து பின்னர் ஜல்லடையில் சலித்து மண் புழு உரமாக மாற்றுகின்றனர் என்பது ஆறுதலாக உள்ளது. இது ஒருபுறமிருக்க இன்றும் திறந்தவெளிகளை கழிப்பிடமாக பயன்படுத்தும் முறை பரவலாக இருக்கவே செய்கிறது. இதை ஒழிக்க பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் சார்பில் வீடுகளில் தனிநபர், பொது இடங்களில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் அமைத்து திறந்தவெளி கழிப்பிட முறையை ஒழிக்க அதிகம் கவனம் செலுத்தப்படுகிறது. இதன் பலனாக இன்றளவில் பெரும்பாலான வீடுகளில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வீடுகளில் சில ஆண்டுகளில் கழிப்பறை தொட்டி நிரம்பிவிடும்போது தனியார் வாகனங்களை அழைத்து பணம் தந்து அகற்றுகின்றனர். ஆனால் இந்த செப்டிக்டேங்க் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே மறைவான ரோட்டோரம், நீர்நிலையில் திறந்துவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடும், துர்நாற்றத்தால் மக்களுக்கு அவதியும் ஏற்படுகிறது. இதை முறைப்படுத்தி அரசு சார்பில் சேகரிப்பு நிலையங்களை ஏற்படுத்தி உரமாக்கிட வேண்டும்.

-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us