தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ த.வெ.க.,வால் மக்களை ஏமாற்ற முடியாது-: திருமாவளவன் சொல்கிறார் திருமாவளவன்

 த.வெ.க.,வால் மக்களை ஏமாற்ற முடியாது-: திருமாவளவன் சொல்கிறார் திருமாவளவன்

 த.வெ.க.,வால் மக்களை ஏமாற்ற முடியாது-: திருமாவளவன் சொல்கிறார் திருமாவளவன்


ADDED : ஏப் 09, 2026 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 01:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: ''தமிழக மக்கள் அரசியல் தெரியாதவர்கள் இல்லை. த.வெ.க.,வினரால் மக்களை ஏமாற்ற முடியாது,'' என வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் அவர் அளித்த பேட்டி: மதுரையில் மகாராஷ்டிரா முதல்வர் பிரசாரம் செய்தபோது மெட்ரோ ரயில் வேண்டும் என்றால் பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டுபோட வேண்டும் என பேசியிருக்கிறார். இதுதான் பா.ஜ., என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். தேர்தல் களத்தில் கூட உருட்டல், மிரட்டல், 'பிளாக்மெயில்' அணுகுமுறையை பா.ஜ.,வினர் கையாள்கின்றனர். வட இந்தியாவில் ஜாதி, மதத்தால் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதைப்போல் இங்கும் முயல்கின்றனர். அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. தேர்தல் முடிவு அவர்களுக்கு சரியான பாடத்தை புகட்டும்.

அ.தி.மு.க., பா.ஜ., அ.ம.மு.க., பா.ம.க., பொருந்தாக் கூட்டணி. கொள்கை அடிப்படையில் முரண்பட்டிருப்பவர்கள் தேர்தல் ஆதாயத்திற்காக இணைந்துள்ளனர். அந்த விரக்தியில் தி.மு.க., கூட்டணி மீது தனிநபர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதி வழங்கும் அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு மட்டுமே உண்டு. விஜய் பரப்புரைக்கு போலீஸ் அனுமதி மறுக்கிறது என வேண்டுமென்றே தி.மு.க.,வுக்கு எதிராக இதை திசை திருப்புகிறார்கள். மக்கள் அரசியல் தெரியாதவர்கள் இல்லை. த.வெ.க.,வினரால் மக்களை ஏமாற்ற முடியாது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us