/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காட்டுப் பன்றியை வேட்டையாடிய இருவர் கைது
/
காட்டுப் பன்றியை வேட்டையாடிய இருவர் கைது
ADDED : டிச 18, 2025 06:32 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே கோம்பைபட்டியில் மின்கம்பி அமைத்து காட்டுப் பன்றியை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
சத்திரப்பட்டி கோம்பைபட்டியில் வன அலுவலர் ராஜா , வனவர்கள் சின்னத்துரை, பிரேம்நாத் ஜெயசீலன் உள்ளிட்ட வனத்துறையினர் ரோந்து சென்ற போது சிந்தலவாடம் பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் 55 , தோட்டத்தில் மின்கம்பி அமைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடியது தெரிந்தது.
ரவிச்சந்திரன், உடந்தையாக இருந்த தாசரிப்பட்டி புதுக்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் 24, ஆகியோரை கைது செய்தனர்.
மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்த ஆண் காட்டு பன்றியை மீட்டனர். கால்நடை டாக்டர் முத்துராமலிங்கம் பரிசோதனைக்கு பின் விருப்பாச்சியில் உள்ள வன அலுவலக வளாகத்தில் புதைத்தனர்.நான்கு டூவீலர்களும் கைப்பற்றப் பட்டன.

