ADDED : டிச 22, 2025 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: பிலீஸ்புரத்தை சேர்ந்தவர் குருநாதன் 23. பெரியகுளம் ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் அருகே தனது ஐபோனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த இருவர் அவசரமாக பேச வேண்டுமென அவரது அலைபேசியை வாங்கினர்.
பேசுவது போல் நடித்து தப்பி ஓடினர். தொழில்நுட்ப உதவியுடன் வத்தலக்குண்டு போலீசார்
காந்திநகரை சேர்ந்த ராஜேஷ் 39, விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த கணேசன் 38 ஆகியோரை கைது செய்தனர்.

