ADDED : மே 30, 2026 03:57 AM
அ நிறம் | அளவு
வடமதுரை: புத்துார் கரிவாடன்செட்டிபட்டி பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளி கொண்டிருந்தவர்களை வடமதுரை போலீசார் சுற்றி வளைத்தனர்.
போலீசாரை கண்டதும் ஒரு மண் அள்ளும் இயந்திரம், டிப்பர் லாரி, கார், டூவீலரை கைவிட்டு அங்கிருந்தவர்கள் தப்பினர்.
வாகனங்களை பறிமுதல் செய்து வடமதுரை ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லும் வழியில் சித்துார் பிரிவு பகுதியில் ரெட்டியபட்டி முத்துகிருஷ்ணன் 30, செண்டுவழி கவுதம்குமார் 23, உள்ளிட்ட சிலர் போலீசாரை வழிமறித்து பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டினர்.
முத்துகிருஷ்ணன், கவுதம்குமாரை கைது செய்த போலீசார் மற்றவர்களை தேடி வருகின்றனர்.
