ADDED : மார் 07, 2026 06:59 AM
திண்டுக்கல்: மதுரை பேரையூர் தாலுகா சந்தையூர் நடுத்தெரு நாகஅர்ஜூன் 26. இவர் மீது கஞ்சா விற்பனை உட்பட பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை 2026 பிப்.,8ல் கள்ளிமந்தையம் போலீசார் பொது அமைதி, பொது சுகாதார பாதிப்பு ஏற்படுத்திய குற்றத்திற்காக கைது செய்து திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
திண்டுக்கல் வேடசந்துார் பாகாநத்தம் சத்யா நகர் ஆனந்தராஜ் 33. இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் 2026 பிப்.,7ல் எரியோடு பகுதியில் ஒரு நபரை கொலை செய்தார்.
இந்த வழக்கில் கைதானவர் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்குறிப்பிட்ட இருவரும் பொது அமைதி, சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்துபவர்கள் என்பதால் எஸ்.பி., பிரதீப் பரிந்துரையில் கலெக்டர் சரவணன் உத்தரவில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

