/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மேம்பால சுவரில் கார் மோதி கேரள பெண்கள் இருவர் பலி
/
மேம்பால சுவரில் கார் மோதி கேரள பெண்கள் இருவர் பலி
மேம்பால சுவரில் கார் மோதி கேரள பெண்கள் இருவர் பலி
மேம்பால சுவரில் கார் மோதி கேரள பெண்கள் இருவர் பலி
ADDED : ஜன 02, 2025 11:48 PM

நத்தம்:கேரள மாநிலம், கோழிக்கோடைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், காரில் தமிழக கோவில்களை தரிசனம் செய்ய வந்தனர்.
காரை கோழிக்கோடைச் சேர்ந்த மிதுன், 35, ஓட்டினார். நேற்று காலை மதுரை மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம் முருகன் கோவில்களுக்கு சென்று விட்டு, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வழியாக திருச்சி சென்று கொண்டிருந்தனர்.
புதுப்பட்டி நான்கு வழிச் சாலையில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மேம்பால தடுப்புச் சுவரில் மோதியதில், காரில் பயணித்தவர்கள் இடிபாடுகளில்சிக்கினர். அக்கம்பக்கத்தினர் அவர்களை சிரமப்பட்டு மீட்டு, நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதில், கோழிக்கோ டைச் சேர்ந்த ஷோபனா, 60, ஷோபா, 58, இறந்தனர். குன்னி கண்ணன், 64, இசானி, 43, உட்பட ஒன்பது பேர் படுகாயங்களுடன், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

