ADDED : ஜூன் 04, 2026 10:54 PM
அ நிறம் | அளவு
கள்ளிமந்தையம்: திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் அருகே மைல்கல், மின்கம்பத்தில் டூவீலர் மோதி இருவர் பலியாகினர்.
நிலக்கோட்டை பள்ளபட்டியை சேர்ந்த வசந்த் பெரியசாமி 19, தாடிக்கொம்பு அகரத்தை சேர்ந்த சின்ன காளை 20.
இருவரும் நேற்று முன்தினம் இரவு பெயிண்டிங் வேலை முடித்துவிட்டு தொப்பம்பட்டி-கள்ளிமந்தையம் ரோட்டில் வாகரை அருகே டூவீலரில் சென்றனர். அப்போது டூவீலர் நிலைதடுமாறி மைல்கல் மற்றும் மின்கம்பத்தில் அடுத்தடுத்து மோதியது. இதில் இருவரும் பலியாகினர். கள்ளி மந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
